Captain TV to conduct sting operations too: Suthish

http://thatstamil.oneindia.in/img/2010/04/13-captaintv200.jpg
நாளை காலை 5.59 மணிக்கு கேப்டன் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு துவங்குகிறது.

இதையொட்டி நடைபெறும் விழாவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோர் வருவார்கள் என முதலில் கேப்டன் டிவி தரப்பில் கூறப்பட்டது.

இப்போது நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அவர்களெல்லாம் வருவார்களா என்றே தெரியவில்லை.

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, குத்து விளக்கு ஏற்றி ஒளிபரப்பைத் துவக்கி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. கேப்டன் டிவியின் வானகரம் அலுவகத்தில் வைத்து இந்த விழா நடக்கவிருக்கிறது.

சேனலின் சோதனை ஒளிபரப்பு குறித்து மக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளதாக கேப்டன் டிவியின் நிர்வாக இயக்குநர் எல்கே சுதீஷ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'கேப்டன் டிவி வழக்கமான அரசியல் கட்சிகளின் சேனல்கள் மாதிரி இருக்காது.

மாநிலம் முழுக்க 134 சிட்டிஸன் ஜர்னலிஸ்டுகளை நியமித்துள்ளோம். இவர்கள் பல 'எக்ஸ்க்ளூசிவ்' தகவல்களைத் தருவார்கள். மக்களின் நிஜமான பிரச்சினை என்னவென்பதை மக்களே சொல்லப் போகிறார்கள்.

இதையெல்லாம் விட முக்கியம், நிறைய புலனாய்வு தகவல்களை ஒளிபரப்பப் போகிறோம். இதற்காக 'ஸ்டிங் ஆபரேஷன்' எனப்படும் ரகசிய புலனாய்வு செய்தியிலும் எங்கள் புலனாய்வுப் படை ஈடுபடும்.

வட இந்திய செய்திச் சேனல்களுக்கு இணையான பரபரப்பும் நேர்த்தியும் அதில் இருக்கும்' என்றார் சுதீஷ்.

Comments

Most Recent