CM to felicitate YG Mahendran | கருணாநிதி ‌தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா

http://img1.dinamalar.com/cini//CNewsImages/Thumb/2019ydeem_T.jpg
11 வயதில் பெற்றால்தான் பிள்ளையா? நாடகத்தின் மூலம் கலையுலகில் நுழைந்து கடந்த 50 ஆண்டுகளாக 7500க்கும் மேற்பட்ட காட்சிகளை நடத்தியிருக்கும் நடிகர் ஒய்.ஜி.மகேந்தினுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. மறைந்த நடிகர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மகன் ஒய்.ஜி.மகேந்திரன். இவர் தனது 11 வயதில் நடித்த முதல் நாடகமான பெற்றால்தான் பிள்ளையா? என்ற நாடகம்தான் பின்னர் சிவாஜிகணேசன் நடித்து பார் மகளே பார் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. வெற்றிகண்டது. 7500க்கும் மேற்பட்ட நாடக காட்சிகளை நடத்தியிருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனன் 300க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருடைய 60வது நாடகம், வியட்நாம் வீடு. இது, மறைந்த சிவாஜி கணேசன் நடித்த நாடகம். சிவாஜி நடித்த பிரஸ்டீஜ் பத்மநாபன் வேடத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சென்னை காமராஜர் அரங்கில் வரும் 30ம்தேதி மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, ஒய்.ஜி.மகேந்திரனைப் பாராட்டிப் பேசுகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன், டைரக்டர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

Comments

Most Recent