மலையாளம், தமிழில் நடித்து வந்த நடிகையான கோபிகாவுக்கு அயர்லாந்து மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் மு...
மலையாளம், தமிழில் நடித்து வந்த நடிகையான கோபிகாவுக்கு அயர்லாந்து மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மலையாளம் மற்றும் தமிழில் முன்னணியில் இருந்தவர் கோபிகா. ஆட்டோகிராப் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார். பின்னர் மலையாளத்தில் தீவிரமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், கேரளாவைச் சேர்ந்த டாக்டரான அஜிலேஷுக்கும் கடந்த 2008ம் ஆண்டு கல்யாணம் நடந்த்து. அஜிலேஷ் அயர்லாந்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து கோபிகா, அயர்லாந்தில் குடித்தனம் நடத்தி வருகிறார்.
கர்ப்பமாக இருந்து வந்த கோபிகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரசவம் நடந்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் கோபிகா. இது சுகப் பிரசவமாம்.
கோபிகாவுக்குக் குழந்தை பிறந்துள்ளதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அயர்லாந்து விரைந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்புகிறாராம் கோபிகா.
Comments
Post a Comment