GV Prakash in Shankar's film

எந்திரன் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்து  இயக்க இருக்கும் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க இருக்கிறார்.  இந்த பட்த்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை ஜி.வி.பிரகாஷுக்கு வழங்க இருப்பதாகவும்,


இது தோடர்பாக அவரிடம் ஏற்கனவே பேசிய ஷங்கர் சில மாதிரி மெட்டுக்களை போட்டுதரும்படி கேட்டதாகவும், ஐந்தே நாட்களில் அந்த டூயூண்களை அவரிடம் சமர்பித்த்தாகவும் ஷங்கர் அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகமான தகவல் நமக்கு கிடைக்கிறது.
இதை உறுதி செய்வதுபோல இருக்கிறது கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த "மதராசபட்டினம்' பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் ஜி.வி.பியை பாராட்டிப்பேசியது.
“மக்கள் சினிமாத துறையை கவனமாக உற்று நோக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நடந்து விடவில்லை. தரமான சினிமாவைக் கொடுக்க வந்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தரமான எந்த முயற்சியும் இங்கு வீண் போகாது. அதற்கேற்றாற் போல் சினிமாவும் மாற்றம் கண்டுக் கொண்டிருக்கிறது. தரமான கதைகளை தரமான கலைஞர்களை கொண்டு உருவாக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எப்போதுமே தரம் இருக்கும். அவரிடம் இருந்து வந்த ஜி.வி. பிரகாஷிடமும் அந்த தரம் தெரிகிறது.'' என்று பாராட்டியிருந்தார். இந்த பாராட்டில் உச்சி குளிர்ந்து போயிருக்கும் ஜி.வி.பிக்கு பாலிவுட் மட்டுமல்ல தனது மாமா ஏ.ஆர்.ரகுமானைப்போல ஹாலிவுட்டிலும் ஜொலிக்க வேண்டும், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என தனது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாராம். முதல்ல உள்ளூர் சந்தையில, காயறதுக்கு முன்னாடி விக்கிற கத்திரிகாய்  பாருங்க தம்பி. அப்பால பாத்துக்கலாம் அக்கம் பக்கம்..

Comments

Most Recent