கச்சேரி ஆரம்பம் படம் 'ஊத்திக் கொண்டாலும்' சந்தோஷமாகவே இருக்கிறார் ஜீவா. அதற்கு 'வந்தான் வென்றான்' படத்தில் தனக்கு ஜோடியாக...
கச்சேரி ஆரம்பம் படம் 'ஊத்திக் கொண்டாலும்' சந்தோஷமாகவே இருக்கிறார் ஜீவா. அதற்கு 'வந்தான் வென்றான்' படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னா ஒப்புக் கொண்டதுதான் காரணமாம்!
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களுக்குப் பிறகு ஆர். கண்ணன் இயக்கும் படம் இந்த வந்தான் வென்றான்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவிடம்தான் கேட்டிருந்தார்களாம். காரணம் கண்ணனின் கண்டேன் காதலை படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர்கள் தனுஷும் த்ரிஷாவும்தானாம்.
ஏதோ அது நடக்காமல் போக, அந்த நினைப்பில் வந்தான் வென்றானுக்கு கால்ஷீட் கேட்க, 'ஜீவாவுடனா ஜோடி?' என்று முகம் சுளித்தாராம் த்ரிஷா.
இப்போது த்ரிஷாவைவிட மார்க்கெட் வலுவாக உள்ள தமன்னாவுடன் ஜோடி சேர்ந்ததில் பூரித்துப் போய்விட்டாராம் ஜீவா.
நல்ல வாய்ப்பை விட்டுட்டோமே என்று அம்மா உமா கிருஷ்ணனுடன் சேர்ந்து இப்போது புலம்புகிறாராம் த்ரிஷா!
Comments
Post a Comment