Kathik Villian for Suriya

அண்ணன் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை : கார்த்தி! 
http://icdn1.indiaglitz.com/tamil/news/karthi080410_1.jpg
சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை என்றார் கார்த்தி. சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘பருத்தி வீரன்’ நல்ல கதை, கேரக்டர் என்பதால் இரண்டு ஆண்டுகள் அதற்காக உழைத்தேன். அதன் பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதுவரை தமிழ் சினிமா சந்திக்காத கதைகளம் என்பதால் அதில் இரண்டு ஆண்டுகள் நடித்தேன்.

என்னைப் போன்ற அறிமுக நடிகனுக்கு இது அதிக காலம். இனி ஒரு படத்துக்கு ஆண்டு கணக்கில் காத்திருந்து நடிக்க மாட்டேன். வயது இருக்கும்போதே அதிக படங்களில் நடித்து விட வேண்டும். அடுத்து வரும் ‘நான் மகான் அல்ல’ யதார்த்தமான சென்னை இளைஞனின் கதை. ‘விக்ரமார்குடு’ தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கிறேன். இது கமர்ஷியல் ஆக்ஷன் படம்.

அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அண்ணன், தம்பியாக நடிக்க மாட்டோம். நான் வில்லனாகவும், சூர்யா ஹீரோவாகவும் நடிக்கலாம். திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை. தமன்னாவுடன் காதல் என்பதில் உண்மையில்லை. எப்போது திருமணம் செய்தாலும் அம்மா பார்க்கும் பெண்ணையே மணப்பேன். இவ்வாறு கார்த்தி கூறினார்.



At a recent ‘Paiyaa’ press conference Karthi was at his candid best when answering even cheeky questions.

When asked what kind of films he would prefer ‘Paiyaa’ Karthi said that he wants to play the mass hero more and want to bash up villains for some time from now. He said he was fortunate to get heavy roles in his first two films but he wants to forget the pattapatti underwear for some time. Karthi also added that after a few years playing the chocolate action hero he will definitely accept films like ‘Paruthiveeran’ and ‘Aayirathil Oruvan’.

When a reporter asked Karthi if he would act in a film with his brother Suriya, he immediately said yes but with a catch. Karthi doesn’t want to play the usual brother-brother with Suriya if offered a film together. But he wants to play a villain while Suriya is playing the hero.

The casting idea sounds very interesting somebody must try it.

Comments

Most Recent