Kollywood Kisu Kisu - ஒதுங்கிய ஹீரோயின் வாய்ப்பை இழந்த ஹீரோ

கோடம்பாக்கம் கோடங்கி

 http://cinema.dinakaran.com/cinema/gallery/news-in-cinema-98.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஐம் காட் ஹீரோவுடன் நடிக்கிறாரு நயனம். படத்தோட முதல் ஷெட்யூல்ல ஹீரோ அடிக்கிற ஜோக்குகளை கேட்டு நயனம் சிரிச்சிட்டே இருப்பாராம்... இருப்பாராம்... ரெண்டு பேரும் நட்பா இருக்கிறாங்கன்னு யூனிட்டே பேசிக்கிச்சாம். ரெண்டாவது ஷெட்யூல்ல நயனம் ஆளே மாறிட்டாராம்... மாறிட்டாராம்... ஹீரோ நெருங்கி வந்தாலும் ஒதுங்கிப் போறாராம். 'டான்ஸ் மாஸ்டரோட அன்பு கட்டளையாலதான் இந்த மாற்றம்Õனு யூனிட்ல பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

பலமான பெயர் கொண்ட ஹீரோவுக்கு வந்த வாய்ப்பெல்லாம் பறி போயிடுச்சாம்... போயிடுச்சாம்... அதுக்கு காரணம், ஹீரோவாட அப்பா இயக்குனருதானாம். Ôஇந்த கதையில ஆக்ஷனே இல்ல. இதுல காமெடி இல்ல. இந்த கதை பையன் இமேஜுக்கு சரியில்லÕன்னு சொல்றாராம்... சொல்றாராம்... கதை சொல்ல வர்ற இயக்குனருங்க கடுப்புல புலம்பிட்டே கிளம்புறாங்களாம்... கிளம்புறாங்களாம்...

ஒரு பாட்டுக்கு இனிமே ஆடப்போறதில்லேன்னு ரகசியமான நடிகை சொல்றாரு. அதுக்கு காரணம், நிறைய சின்ன படங்கள்ல நடிகை ஒரு பாட்டுக்கு ஆடினாரு... ஆடினாரு... அதுல பாதி படங்கள்ல பேசின சம்பளத்தை கொடுக்கலையாம்... கொடுக்கலையாம்... ஏகப்பட்ட டார்ச்சரும் தந்தாங்களாம்... தந்தாங்களாம்... அதனால இனிமே பெரிய படங்கள்ல மட்டும் டான்ஸ் ஆடுவேன்னு சொல்றாராம்... நடிகை சொல்றாராம்... சின்ன படங்கள்ல டான்ஸ் ஆட கேட்டா, முழு சம்பளத்தையும் ஷூட்டிங் ஸ்பாட¢ல கொடுத்தாதான் நடிப்பேன்னு கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்...

Comments

Most Recent