Kollywood Kisu Kisu - பைனான்ஸ் நடிகை சமாதான அப்பா

கோடம்பாக்கம் கோடங்கி

 http://cinema.dinakaran.com/cinema/gallery/news-in-cinema-99.jpg



நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

தங்கமான சண்டை இயக்குனரோடு சண்டை போட்டவரு அனாமி நடிகை. சினிமாவை விட்டு விலகி, இப்போ பைனான்ஸ் நடத்தும் ஒருவரை
சீக்ரெட் மேரேஜ் பண்ணிக்கிட்டாரு... பண்ணிக்கிட்டாரு... தெரிஞ்சவங்க படம் தயாரிக்கிறதா இருந்தா, பைனான்ஸ் உதவி பண்றாராம்... நடிகை பண்றாராம்... கணவரோட பிசினசை டெவலப் பண்றதுதான் என்னோட லட்சியம்னு நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...

மலையாள ஆக்டர் சங்கம் தயாரிச்ச படத்துல பிசின் நடிக்கல. அதனால அங்கே அவருக்கு ரெட் போட்டிருக்காங்க. மகள் மேல் கோபமாக இருக்கிற சினிமா வி.ஐ.பி.களை பிசினோட அப்பா சந்திச்சாராம்... சந்திச்சாராம்... சமாதானமா போயிடலாம்னுனும் சொன்னாராம். நடிகை வருத்தம் தெரிவிச்சாதான் தடைய நீக்க முடியும்னு வி.ஐ.பி.ங்க சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம்...

தமிழ்லருந்து இந்திக்கு போனவரு இஷாவான நடிகை. கல்யாணமாகி செட்டிலாயிட்டாரு. கல்யாணத்துக்கு முன்னாடி அவரு லெஸ்பியனா நடிச்ச இந்தி படத்தை திரும்ப ரிலீஸ் பண்ண தயாரிப்பு பிளான் பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... விஷயம் தெரிஞ்ச நடிகை, தயாரிப்புகிட்ட கெஞ்சினாராம். Ôஇப்போ என்னோட இமேஜ் வேற. தயவு செஞ்சு படத்தை திரும்ப ரிலீஸ் பண்ணாதீங்கÕனு அழாத குறையா கேட்டாராம்... கேட்டாராம்... தயாரிப்பும் சரினு, அதுக்கு பதிலா தமிழ்ல டப்பிங் பண்றாராம்... பண்றாராம்...

Comments

Most Recent