நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... எல்லோருமே சுகம்னு படம் எடுத்த இயக்குனரு, பி.சி.யான கேமராமேனை அடுத்த படத்துக்கு புக் ப...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
எல்லோருமே சுகம்னு படம் எடுத்த இயக்குனரு, பி.சி.யான கேமராமேனை அடுத்த படத்துக்கு புக் பண்ணியிருந்தாரு... பண்ணியிருந்தாரு... ஆனா படம் ஆரம்பம் ஆகாம தள்ளிப்போயிட்டே இருக்காம். வெறுத்துப்போன கேமரா, தெலுங்கு படத்துக்கு போயிட்டாராம்... போயிட்டாராம்... அதனால கேமராமேன் மேல இயக்குனரு கடுப்புல இருக்கிறாராம்... இருக்கிறாராம்...
ஷூட்டிங் ஸ்பாட்ல திடீர்னு மயங்கி விழுந்தாரு சானா நடிகையோட அம்மா. அதனால இனிமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட வரவேணாம்னு நடிகை சொல்றாராம்... அம்மாகிட்ட சொல்றாராம்... ஆனா தாய்க்குலமோ கண்டிப்பா வருவேன்னு அடம்பிடிக்கிறாராம்... அடம்பிடிக்கிறாராம்... அதுக்கு காரணம், படத்துல நடிக்கிற சாந்த ஹீரோகூட நடிகைக்கு லவ்வுன்னு வந்த தகவல்தானாம்... தகவல்தானாம்...
மூணுஷா நடிகை இந்தி படத்துல நடிக்கிறாரு. சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து மும்பையில ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ற சினிமா குரூப்லேயும் மூணுஷா மெம்பரா சேர்ந்திருக்காராம்... சேர்ந்திருக்காராம்... தன்னோட தோழியான மழை நடிகையையும் சேர சொல்லி வற்புறுத்துறாராம்... வற்புறுத்துறாராம்...
Comments
Post a Comment