நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... பெருசா பிகு பண்ணிக்கொண்டிருந்த பிசின் நடிகை, இப்போ ஆளே மாறிட்டாராம். யாரை பார்த்தாலும...
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
பெருசா பிகு பண்ணிக்கொண்டிருந்த பிசின் நடிகை, இப்போ ஆளே மாறிட்டாராம். யாரை பார்த்தாலும் சிரிச்சு வணக்கம் வச்சு பணிவா பேசுறாராம்... பேசுறாராம்... தெரிஞ்ச இயக்குனருங்க, தயாரிப்பாளருங்க, ஹீரோக்களுக்கு தவறாம போன் பண்ணி நலம் விசாரிக்கிறாராம்... விசாரிக்கிறாராம்... பிறந்த தேதிகளை குறிச்சு வச்சு, வாழ்த்து சொல்றாராம்... சொல்றாராம்...
கல்யாணம் பண்ணிக்கிட்டதால சில பட வாய்ப்பை இழந்த நாயர் நடிகை, நடிப்பு தாகம் தீராம தவிக்கிறாராம்... தவிக்கிறாராம்... 'சினிமா வேண்டாம் டி.வி ஓகே'னு கணவர்குலம் பச்சைக்கொடி காட்டிட்டாராம்... காட்டிட்டாராம்... அதனால நாயர் சின்னத்திரை வட்டாரத்திடம் கதை கேட்க ஆரம்பிச்சிருக்காராம்... ஆரம்பிச்சிருக்காராம்... சீக்கிரமே மலையாளம் அல்லது தமிழ் டிவியில நடிகையை பாக்கலாமாம்... பாக்கலாமாம்...
எனக்கும் பொய் சொல்லப்போன ஹீரோயினுக்கும் லவ்வுனு லவ்ஜி காமெடி நடிகர் ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுறாராம்... திரியுறாராம்... தன்னோட பேஸ்புக்குல கூட எழுதினாராம்... எழுதினாராம்... விஷயத்தை கேள்விப்பட்ட நடிகை, தாம்தூம்னு குதிச்சாராம்... குதிச்சாராம்... பிறகு, சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்னு நடிகரு எஸ் ஆனாராம்... ஆனாராம்...
Comments
Post a Comment