கலைஞர் டி.வி.,யில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக வி...
கலைஞர் டி.வி.,யில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக விளங்கி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சி மேலும் மேலும் மெருகு கூடி வருகிறது. கலா மாஸ்டர், ரம்பா, குஷ்பு, நமீதா என பல நடுவர்களை சந்தித்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்போது நிகழ்ச்சியின் 5ம் பாகம் புதிய பரிமாணத்துடன் உருவாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கும் சில சுற்றுகள் நம்மை கடந்த காலத்திற்கு பயணிக்கச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதாம். எழுபதுகளில் என்ற அந்தக்கால பாடல்களும், அதே மாதிரியான சிகையலங்காரம், உடை என ஒரு சில சுற்றுக்களும் உண்டு. இன்றைய சினிமா என்ற சுற்றில் லேட்டஸ்ட் படங்களில் பங்கு பெற்றவர்களை வரவழைத்து இந்த கால பாணிகளையும் கண் முன்னே கொண்டு வருவதும் தனிச்சிறப்பாக அமையும் என்கிறது கலைஞர் தொலைக்காட்சி.
Comments
Post a Comment