சாக்லேட் ஹீரோ என்ற அந்தஸ்துடன் நுழைந்து தற்போ...
சாக்லேட் ஹீரோ என்ற அந்தஸ்துடன் நுழைந்து தற்போது தேர்ந்த நடிகராக தமிழ், இந்தி என கலக்கி வரும் நடிகர் மாதவனின் மகன் வேததாந்த் விளம்பர படத்தில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் தன் நடிப்புப் பயணத்தை விளம்பர படங்கள் மூலம் தான் தொடங்கினார். தந்தை வழியில் மகனும் தற்போது விளம்பர படத்தில் நடிக்கிறார். மாதவன் வாரிசின் பெயர் வேதாந்த். வயது 5. படு சுட்டியான வேதாந்த் கற்பூரம் மாதிரி கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டு நடிப்பில் அசத்துகிறாராம். வேதாந்த் கலக்கியுள்து சமூகநல விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது கொசுறு தகவல். ஆனால் எந்த மாதிரியான விழிப்புணர்வு விளம்பரம் என்பது மட்டும் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. வேதாந்த் நடித்ததை பார்த்து ஸ்பாட்டில் இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்களாம். சிலர் நேரடியாக மாதவினடமே வந்து சார், சின்னவர் பெரிய ரவுண்ட் வருவார் என பலே சொல்லிவிட்டும் சென்றுள்ளனர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. மகனைக் கண்டு பெருமிதத்தில் இருக்கிறாராம் மாதவன்.
Comments
Post a Comment