தமிழ் கதாநாயகன்கள் பிற மொழிகளில் வில்லனாக நடி...
தமிழ் கதாநாயகன்கள் பிற மொழிகளில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமதியாகிவிட்ட மீனா மீண்டும் நாயகியாகியிருக்கிறார். திருமணமான நடிகை கதாநாயகியாக நடிப்பது தமிழ்த் திரையுலகில் அரிது. மீனாவுக்கு அப்படியொரு அரிய வாய்ப்பை வழங்க தமிழ்த் திரையுலகம் தயாராக இல்லை. ஆனால் கன்னட படவுலகம் விரித்திருப்பதோ சிவப்பு கம்பளம். ரமேஷ் அரவிந்தின் புதிய படத்தில் மீனா கதாநாயகி. படத்தை இயக்கியிருப்பவர் வி.சேகர். இவர் தமிழில் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா படத்தைதான் கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார். வி.சேகர் தமிழில் படம் இயக்கி பல வருடங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment