முக்தா சீனிவானுக்கு அறிமுகம் தேவையில்லை... அவரும் அவரது சகோதரரும் இணைந்து இயக்கி, தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. சிவாஜி க...
முக்தா சீனிவானுக்கு அறிமுகம் தேவையில்லை... அவரும் அவரது சகோதரரும் இணைந்து இயக்கி, தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இமயம், அந்தமான் காதலி, பரீட்சைக்கு நேரமாச்சு, கீழ்வானம் சிவக்கும் உள்ளிட்ட படங்களைக் சிவாஜியை வைத்துக் கொடுத்தார்.
ரஜினியை வைத்து பொல்லாதவன், சிவப்புச்சூரியன் ஆகிய படங்களைக் கொடுத்தார். கமல்ஹாசனை வைத்த நாயகன், சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட படங்களைக் கொடுத்தார். பாண்டியராஜனை வைத்து இவர் எடுத்த வாய்க்கொழுப்பு, கதாநாயகன் ஆகிய படங்கள் காமெடிக்காக ஹிட் ஆன படங்களாகும். இவரது தயாரிப்பில் வெளியான சினிமாப் பைத்தியம், சூரியகாந்தி, தவப்புதல்வன் ஆகியவை பாராட்டுப் பெற்ற படங்களாகும்.
இடையில் சில காலம் படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்த முக்தா சகோதரர்கள், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் முழு வீச்சில்.
இந்த முறை புதிய கதைகளைத் தேடாமல், தங்களின் சூப்பர் ஹிட் படங்களையே மீண்டும் ரீமேக் செய்யப் போகிறார்களாம்.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான பொல்லாதவன், சிவக்குமார் - லட்சுமி நடித்த அவன் அவள் அது மற்றும் பாண்டியராஜன்- எஸ்வி சேகர் நடித்த வாய்க்கொழுப்பு ஆகிய மூன்று படங்களையும் ரீமேக் செய்யவிருப்பதாக முக்தா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்களை முக்தா வி ராமசாமியின் மகன் முக்தா கோவிந்துடன் இணைந்து தயாரிக்கிறார் முக்தா சீனிவாசன். இப்படங்களில் நடிப்பவர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
பொல்லாதவன் என்ற பெயரில் ரஜினியின் மருமகன் தனுஷ் ஏற்கெனவே ஒரு படம் நடித்து வெளியிட்டதும், அந்தப் படத்தின் வெற்றி காரணமாக, ரஜினி படத் தலைப்புகளை மொத்தமாக அவர் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம்
Comments
Post a Comment