Entertainment
›
Cine News
›
Nayanthara back to her home town | தமிழில் படமில்லை... ஹோட்டலை காலி செய்த நயன்!
எத்தனை நாள்தான் தமிழ்ப் படங்களுக்காக காத்திருப்பது? என்ற விரக்தியில் மீண்டும் மலையாளத்துக்கே திரும்பினார் நயன்தாரா. சென்னையில் வழக்கமாக...
எத்தனை நாள்தான் தமிழ்ப் படங்களுக்காக காத்திருப்பது? என்ற விரக்தியில் மீண்டும் மலையாளத்துக்கே திரும்பினார் நயன்தாரா.
சென்னையில் வழக்கமாக தங்கும் ஹோட்டல் அறையையும் காலி செய்துவிட்டு, தன் சொந்த ஊருக்கே போய்விட்டார்.
தமிழில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்ந்தவர் நயன்தாரா. ரஜினியுடன் மூன்று படங்களில் தலைகாட்டியவர்.
அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நயன், நிஜ வாழ்க்கையில் பிரபு தேவாவுடன் ஜோடி போட்ட கையோடு மார்க்கெட்டை இழந்தார். அத்துடன் அவரது தோற்றமும் பொலிவிழந்த நிலைக்கு மாறியதால், நயன்தாராவுடன் ஜோடி சேர தமிழில் இப்போது நடிகர்கள் தயாராக இல்லை.
இப்போது அவர் நடித்து வந்த ஒரே படம் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் மட்டுமே. இநதப் படத்தின் படப்பிடிப்பும் கூட முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை வேறு புதுப்படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு ஒப்பந்தமாகவில்லை.
இந் நிலையில் மீண்டும் மலையாளத்துக்கே திரும்ப முடிவு செய்தவர், சென்னையில் தான் தங்கியிருந்த ஹோட்டலையும் காலி செய்துவிட்டார்.
மலையாளத்தில் இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கும் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
Comments
Post a Comment