Nithyanada issue : Actress Ranjitha statement | நித்யானந்தா விவகாரம் : ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை

http://img1.dinamalar.com/cini//CNewsImages/2049ranjitha1.jpg
சாமியார் நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி 2 மாதங்களை கடந்தும், ரஞ்சிதா தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்காமலேயே தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் டில்லியில் தனது வக்கீல் மூலம் நடிகை ரஞ்சிதா ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு (ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும். வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக்கெடு விடுத்து இருக்கிறோம். ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இந்த பிரச்னை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார். எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதா தற்போது கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் தெக்கத்தி பொண்ணு சீரியலில் நடித்து வந்தார். இது தவிர மணிரத்னத்தின் ராவணா படத்திலும் முக்கிய காட்சியிலும் நடித்து வந்தார். வீடியோ சர்ச்சையால் தெக்கத்தி ‌பொண்ணு சீரியலில் ரஞ்சிதாவை சில நாட்கள் காட்டாமல் இருந்தனர். பின்னர் ரஞ்சிதா இறந்து விட்டது போல காட்சியமைத்து அவரது கேரக்டரை வெட்டி விட்டார்கள். தலைமறைவான ரஞ்சிதாவின் கேரக்டரே ராவணாவில் இருந்து வெட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாயின. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல, சாமியார் நித்தியானந்தா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், வீடியோவில் இருப்பது ரஞ்சிதாதான். அவருடன் இருப்பது நான் இல்லை... என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருப்பதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamil actress Ranjitha yesterday came forward to disclose the mystery of her silence and absence since the sex scandal video tape between her and Swami Nithyananda surfaced. She was called by the police for interrogation as Swamiji was not co-operating with them. And according to sources Ranjitha has disassociated her presence in the video.


She alleged that the use of her images in the tape has considerably damaged her reputation and has violated various laws. Her lawyers claimed that their client strongly object her presence in the video tape and that has caused unnecessary loss of reputation, mental harassment, agony, loss of earnings, which are all actionable wrongs. The statement also declared that she fears huge conspiracy against her and said that she would fight for her justice. The statement also said legal notices had been issued to Google Inc and YouTube, asking them to remove the said videos. She also claimed that the so called 'interviews' by her after the video was out was merely a fabricated one.

Comments

Most Recent