நான் கடவுள் படத்தில் பாலாவின் செய் நேர்த்திக்கு பாராட்டும், பிறகு தேசிய விருதும் பாலாவுக்கு கிடைத்தாலும், நான் கடவுள் தவறான கருத்துடன் வ...
ஆனால் விமர்சனங்களுக்கு எத்தகைய எதிவினையும் காட்டாத பாலா, அமைதியாக இருந்தார். ஆனால் சூட்டோடு சூடாக அவன் இவன் படத்தை தொடங்கினார்.
ஆர்யா, விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.. படத்தின் நாயகியாக ஜனனி அய்யர் என்ற புதுமுகம் தேர்வு செய்யபட்டார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் 48 நாட்கள் திட்டமிடப்பட்டு 18 நாட்களில் பேக் அப் ஆனது. பாலா பாதியில் மூட்டை கட்டி திரும்பியதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் மீடியா தலையைப் பிய்த்துக்கொள்ள, காணாமல் போயிருந்த பாலா இப்போது சென்னை திரும்பியிருக்கிறார். அவரது அலுவலகத்துகு, விஷாலின் சகோதரர் கிருஷ்ணா திரையுலக பிரபலங்கள் பலருடன் வருவதும் போவதுமாக இருக்கிறார். விஷாலும் பலமுறை வந்து வந்து போகிறாராம். ஆனால் பாலா இவர்களை சந்திக்க விரும்பவில்லை.
தேனியில் பத்துநாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு திருநெல்வேலிக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்ட நேரத்தில் தனக்கு கதை சொல்ல வரும்படி இயக்குனர் பூபதி பாண்டியனை அழைத்திருந்தாரம் விஷால். ஆனால் மரியாதைக்குக்கு கூட இதை பாலாவிடம் சொல்லவில்லையாம் விஷால். மேலும் அங்கேயே எடிட்செய்து பார்த்த வகையில் விஷாலின் நடிப்பு பாலாவுக்கு திருப்தியாக இல்லாதகோபம்வேறு சேர்ந்து கொள்ள படபிடிப்பு தளத்துக்கு பூபதி பாண்டியன் வந்தபிறகுதான் அமளி ஆரம்பித்தாக சொல்கிறார்கள் படவட்டாரத்தில். ஒரு முழுநாள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பூபதி பாண்டியண், அன்று இரவு தண்ணியடித்து, விஷாலுக்கு கதை சொல்லி அதிகாலையில் புறபடும்போது தூங்காமல் உலாத்திக்கொண்டிருந்த பாலாவிடம்போய் “இந்த இந்த மாதிரி காமடி படமெடுக்க நாங்க இருக்கோம். நீங்க எதுக்குன்னே” என்று விளையாட்டாகச் சொல்லப் போய் இரண்டுமணி நேரம் பெரிய ரகளையாகிவிட்டதாம்.
போதுவாக இண்டஸ்ட்ரியைச் சேர்ந்த யாரையும் தனது படத்தை வேடிக்கை பார்க்க விடாத பாலாவை பூபதிபாண்டியன் புரிந்து கொள்ளாத்து ஒருபக்கம் என்றால் ,இன்னோருபக்கம் “ பாலா படம்ன்னா ஆளையே மாற்றிடுவார்ண்ணு நம்பிதான் ஒத்துகிடேன். ஆனால் இது அதுமாதிரி படம் இல்ல. அவரெஜ் படம்தான்” பூபதி பாண்டியனிடம் விஷால் புலம்பியதாகவும், இந்த புலம்பல் பாலா காதுக்கு போனதால்தான் பாலாவின் ரகளைக்கு காரணம் என்று தகவல்கள் காதை கடிக்கின்றன.
இதனால் அவன் இவனில் விஷால் வேண்டாம் என்று பாலா முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இன்னும் சிலர் அவன் இவன் கைவிடப்பட்டுவிட்ட என்றும் தகவல் தருகிறார்கள். அகோரிகளின் உலகத்தை விட மர்ம்மாகவே இருக்கிறது பாலா அலுவலக விவகாரம். இன்னும் சில நாட்களில் கத்தரிக்காய் முற்றி சந்தைக்கு வரும் என்று நம்பலாம்.!
Comments
Post a Comment