Ok for Item Song - Kasthuri | குத்து ஓகே : கஸ்தூரி

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-949.jpg
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மலை மலை’ படத்தில் சின்ன கேரக்டரில் தோன்றிய கஸ்தூரி, ‘தமிழ்ப்படம்’ படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடினார். இதையடுத்து சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட கேட்டனர். ஆனால், இனி ஒரு பாடலுக்கு ஆட மாட்டார் என்று யாரோ கிளப்பி விட்டதால், வாய்ப்புகள் நழுவிச் சென்றதாக வருத்தப்படுகிறார். ‘‘தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட தயாராக இருக்கிறேன். அக்கா, அண்ணி வேடங்களை தவிர்க்கிறேன். அதில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அது எனக்குப் பொருந்தினால் மட்டுமே நடிப்பேன். வந்தோம், போனோம் என்றிருக்க கூடாது’’ என்கிறார் கஸ்தூரி.

Comments

Most Recent