பொன்னர் சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரசாந்த்! பொன்னர் சங்கர் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாட...
பொன்னர் சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரசாந்த்!
பொன்னர் சங்கர் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடினார் நடிகர் பிரசாந்த். பத்திரிகையாளர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார் பிரசாந்த்.
சென்னை அடையாறு பாம்புப் பண்ணை அருகே பொன்னர் சங்கர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில், தியாகராஜன் இயக்கத்தில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இன்று பிரசாந்தின் பிறந்த நாள். இந்த நாளை அவர் பொன்னர் சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடினார். ஒரு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது.
பிரசாந்தின் தந்தையும் படத்தின் இயக்குநருமான தியாகராஜன், பிஆர்ஓ நிகில் மற்றும் சக நடிகர்கள், பத்திரிகையாளர்கள் சூழ கேக்கை வெட்டி கொண்டாடினார் பிரசாந்த்.
Comments
Post a Comment