அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலனுக்கு தமுஎச - சிஐடியு சார்பில் பாராட்டு விழா நிஜமான வலிகளை, தவிப்பான ஒரு வாழ்க்கையை, யாரும் தொடத் துணிய...
அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலனுக்கு தமுஎச - சிஐடியு சார்பில் பாராட்டு விழா
நிஜமான வலிகளை, தவிப்பான ஒரு வாழ்க்கையை, யாரும் தொடத் துணியாத ஒரு களத்தைத் தேர்வு செய்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வைத் தந்திருக்கிற அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்தபாலனுக்கு பாராட்டு விழா நடத்துகின்றன சிஐடியுவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்.
நாளை ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் இந்த விழா நடக்கிறது.
சிஐடியு தொழிற்சங்கத்தின் எம்.சந்திரன், சௌந்தரராஜன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சுகாசினி, சகி, பாலாஜி சக்திவேல், ராதா மோகன், சிம்புதேவன், கவிஞர் நந்தலாலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமுஎச கலை இரவில் பங்கேற்ற வசந்தபாலன்
முன்னதாக நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவு நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் இயக்குநர் வசந்தபாலன்.
விடிய விடிய நடந்த இந்த கலை இரவில், ஒரு தரமான சினிமாவைத் தந்ததற்காக வசந்தபாலனுக்கு அனைத்து எழுத்தாளர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Comments
Post a Comment