Ranjitha continues in Raavana

http://thatstamil.oneindia.in/img/2010/04/07-ranjithaa200.jpg
நித்யானந்தாவின் காம ஆராய்ச்சியில் மூழ்கி காமிராவில் சிக்கிக் கொண்ட ரஞ்சிதாவை முதலில் தன் படத்திலிருந்தே தூக்கியதாக அறிவித்த மணிரத்னம், இப்போது மீண்டும் சமாதானமாகி விட்டாராம்.

எனவே பழையபடி, அதே முக்கியத்துவத்துடன் ராவணனில் நடிக்கிறாராம் ரஞ்சிதா.

நித்யானந்தா செக்ஸ் லீலையில் ரஞ்சிதாவின் பெயர் உலகம் முழுக்க படு பிரபலமானதும், அவர் உடனே தலைமறைவானார். சாமியாரின் சீடர்கள் துணையுடன் சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அமெரிக்காவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இதனால் அவரை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மணிரத்னம், ஒரு கட்டத்தில் ரஞ்சிதாவை நீக்குவதாக அறிவித்துவிட்டு வேறு நடிகையைத் தேடினார்.

இந்த நிலையில் மணிரத்னத்தைத் தொடர்பு கொண்ட ரஞ்சிதா தனது நிலைமை குறித்து எடுத்துச் சொன்னதாகவும், தன்னை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வீடியோ எடுக்கப்பட்ட சூழல், தனது நெருக்கடியான நிலை பற்றியெல்லாம் உருக்கமாக அவர் கூற, மணிரத்னமும் சமாதானமாகி விட்டாராம்.

இந்தப் படத்தில் விக்ரமின் முறைப்பெண் வேடத்தில் நடிக்கிறார் ரஞ்சிதா. அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. மேலும் சில சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது. எனவே கேரளாவில் வந்து நடித்துக் கொடுத்துவிடுவதாக ரஞ்சிதா கூறியதால், அவர் தொடர்பான காட்சிகளை மட்டும் கேரளாவில் வைத்து எடுக்கிறாராம் மணிரத்னம்.

Comments

Most Recent