Entertainment
›
Cine News
›
Ranjitha wants night time inquiry | இரவில் மட்டும் விசாரிக்க ரஞ்சிதா கோரிக்கை
பெங்களூர் : பகலில் விசாரணைக்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தி...
பெங்களூர் : பகலில் விசாரணைக்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.
நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.
இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.
மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.
Comments
Post a Comment