இந்தி படங்களுக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் முருகதாஸ் இ...
இந்தி படங்களுக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் கதை விவாதம் நடந்து வருகிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே படமாக்க உள்ளனர்.
லொகேஷன் பார்க்கும் பணியும் நடக்கிறது. அதற்காக சென்னை வந்துள்ளார் ரவி கே. சந்திரன். ‘தமிழ் படங்களில் இதுவரை காட்டாத சென்னையை காட்ட முடிவு செய்துள்ளோம். லைட்டிங், காட்சிகளை வழங்கும் விதத்தில் புதுமை இருக்கும்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment