Entertainment
›
Cine News
›
Rs.25 lakhs penality: Meera Jasmine's search for negotiator | ரூ. 25 லட்சம் அபராதம்: சமாதானம் பேச ஆள் தேடும் ஜாஸ்மின்

துருதுரு நடிகை மீராஜாஸ்மின் மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த பிரச்னையில் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதமாக விதிக்க...
துருதுரு நடிகை மீராஜாஸ்மின் மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த பிரச்னையில் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று, ஆண்டுதோறும் நட்சத்திர கலை விழாவினை நடத்தி வருகிறது. இதற்காக, மலையாள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுக்கிறது அந்நிறுவனம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவில் பங்குகொள்வதற்காக, மீராஜாஸ்மீனுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. லட்சத்தை வாங்கி கொண்ட மீரா, விழாவில் பங்குகொள்ளவில்லை.
பொதுவாக அட்வான்ஸ் தொகையை திருப்பித் தரும் வழக்கம் நடிகைகளிடம் இல்லை என்பதால், ஜாஸ்மினும் தான் பெற்ற பணத்தை ஏப்பம் விட்டுவிட்டார்.
இந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக, மீராஜாஸ்மினிடம் பலமுறை பேச அந்நிறுவனம் முயற்சித்தும் முடிவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அந்நிறுவம், மீரா ஜாஸ்மின் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் முடிவு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன்படி, ஜவுளி நிறுவனத்துக்கு மீராஜாஸ்மின் ரூ.25 லட்சம் அபராதமும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகை யையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அபராதத்தால் அரண்டு போன மீராஜாஸ்மின், பிரபல ஜவுளி நிறுவனத்திடம் சமாதானம் பேச ஆள் தேடி வருகிறாராம்.

Comments
Post a Comment