Saif Ali Khan - Kareena ரகசிய நிச்சயதார்த்தமா ?

saif ali khan kareena


நடிகர் சைஃப் அலி கானுடன் நடிகை கரீனா கபூர் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் சாகித் கபூருடன் நெருங்கி பழகி வந்த நடிகை கரீனா கபூர் பின்னர் அவரை உதறி தள்ளி விட்டு திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் சைஃப் அலிகானுடன் நெருக்கமானார். அவருடன் இணைந்து நடித்த குர்பான் ஆடை குறைப்பில் நடித்த கரீனா கபூர், முதுகு முழுவதும் தெரியும் படி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு சிவசேனா வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கரீனாவிற்கு சேலைகள் வாங்கி அனுப்பி வைத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கரீனா இதெல்லாம் ஒரு அசிங்கமா? என எதிர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கரீனா நடிகர் சைஃப் அலிகானுடன் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சைஃப் அலிகான் வீட்டில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாக பாலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து நிருபர்கள் கேட்டபோது இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். நடிகை கரீஷ்மாவிற்கு சற்றும் குறையாத பரபரப்புடன் தங்கை கரீனாவும் வதந்தி களில் முன் னணி வகித்து வரு வது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent