Sharukh ready to dance naked!

http://thatstamil.oneindia.in/img/2010/04/05-sharuk200.jpg
தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது கேகேஆர் அணி வென்று விட்டால் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாகக் கூட ஆட்டம் போட்டு கொண்டாடுவேன் என நடிகர் ஷாருக்கான் கூறினார்.

ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் இவ்வாறு தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் பேசிய ஷாருக்கான்,

'இந்தாண்டு கேகேஆர் வெற்றி பெற்று விட்டால், வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் டிஒய் பாட்டீல் மைதானத்தில் என்னுடைய, 'டர்ட் இ டிஸ்கோ' பாட்டுக்கு நிர்வாணமாக டான்ஸ் ஆடி மகிழ்வேன்' என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

நிகழ்ச்சி மேடையில் இருந்த படி சிரித்துக்கொண்டே இதைக் கேட்ட ஐபிஎல் தலைவர் லலித் மோடி, பின்னர் பேச வந்தபோது,

'ஷாருக்கான் மிகவும் பொசசிவ் இயல்பு கொண்டவர். தன்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வார்.

கேகேஆர் வெற்றி முகத்தில் இருந்தால், அவர் சொன்னபடி நிர்வாண ஆட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என்றார்.

Comments

Most Recent