தமிழ்நாட்டை விட்டு மும்பை சென்றாலும் சென்னை ஞாபகத்திலேயே இருக்கிறாராம் சிம்ரன். கணவர் தீபக் பஹா ஹீரோவாக நடிப்பதாகவும் சிம்ரன் சிபாரிசு செ...

தமிழ்நாட்டை விட்டு மும்பை சென்றாலும் சென்னை ஞாபகத்திலேயே இருக்கிறாராம் சிம்ரன். கணவர் தீபக் பஹா ஹீரோவாக நடிப்பதாகவும் சிம்ரன் சிபாரிசு செய்வதாகவும் கிளம்பிய வதந்திகள் அடங்கிவிட்டன. இப்போது சிம்ரனின் கவனம் டி.வி தொடர் தயாரிப்பில் திரும்பியுள்ளது. தெலுங்கு தொடரிலும் நடித்து வருகிறார். தமிழ்ப் படங்களில் மீண்டும் நடித்தபோது, சென்னை முட்டுக்காடு பகுதியில் காலிமனை வாங்கினார். இப்போது அங்கு பங்களா கட்டும் பணியை தொடங்கியுள்ளார். விரைவில் சென்னையில் நிரந்தரமாக குடியேறும் சிம்ரனுக்கு டி.வி தொடர் மட்டுமின்றி, சினிமா தயாரிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

Comments
Post a Comment