ஜெயம் ரவி - தமன்னா நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் தில்லாலங்கிடி படத்தை வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். எடிட்டர் மோகன் தய...
ஜெயம் ரவி - தமன்னா நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் தில்லாலங்கிடி படத்தை வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.
எடிட்டர் மோகன் தயாரித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கிக் படத்தின் ரீமேக் ஆகும். ஷாம் இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து பாஸிடிவான செய்திகள் வந்து கொண்டிருப்பதைத் தொர்ந்து, தில்லாலங்கிடியை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன்.
இதனால் இந்தக் கோடையில் வெளியாகும் அனைத்து பெரிய படங்களுமே சன் பிக்டர்ஸ் வெளியீடாகவே அமைந்துள்ளது.
விஜய் - தமன்னா நடித்து வெளியாகும் சுறா, சூர்யா - அனுஷ்கா நடித்துள்ள சிங்கம் போன்ற படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது.
ஜூன் மாதம் தில்லாலங்கிடி வெளியாகக் கூடும் என்கிறார்கள்.
Comments
Post a Comment