Sun TV - New Mega Serial | சன் டிவியில் புதிய தொடர் முந்தானை முடிச்சு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-29.jpg
சன் டிவியில், ‘முந்தானை முடிச்சு’ என்ற புதிய மெகா தொடர், 26&ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சினிடைம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துக்காக, ‘மெட்டி ஒலி’, ‘முகூர்த்தம்’ ஆகிய மெகா தொடர்களை தயாரித்தவர் சித்திக். இவர் அடுத்து தயாரிக்கும் மெகா தொடர் ‘முந்தானை முடிச்சு’. வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை தலைநிமிர்த்த போராடும் நாயகி தமிழரசியுடன் அவருக்கு துணையாக மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். தானும் தன் தம்பியும் ஒற்றுமையாக இருப்பது போல் தனது 3 மகன்களும் இல்லையே என்று கவலையோடு இருக்கிறார் மளிகை வியாபாரி கந்தசாமி. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் இத்தொடர்.

டெல்லிகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீஜா, சுலக்ஷனா, குயிலி, மனோகர், ரவி பிரகாஷ், எஸ்.என்.லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ‘கோலங்கள்’ தொடரில் இணை இயக்குனராக பணியாற்றிய, சேலம் சிவா, கதை எழுதி இயக்குகிறார். திரைக்கதை, வசனம் வே.கி.அமிர்தராஜ். பாடல் இசை, குமார் & பாண்டியன். வைரமுத்து பாடல் எழுதுகிறார். ஒளிப்பதிவு அசோக். பின்னணி இசை இளங்கோ. நடனம், ‘காதல்’ கந்தாஸ். இத்தொடர் ஏப். 26&ம் தேதி முதல், சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Comments

  1. மொக்கை தொடர். இயக்குனர் ஞானசீலன் மொக்கை சீலன்

    ReplyDelete
  2. மொக்கை தொடர். இயக்குனர் ஞானசீலன் மொக்கை சீலன்
    மொக்கை தொடர். இயக்குனர் ஞானசீலன் மொக்கை சீலன்

    ReplyDelete

Post a Comment

Most Recent