Sushmita Sen adopts another girl child | பெண் குழந்தையை தத்தெடுத்த சுஷ்மிதா சென்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/Thumb/2045sushmitha_T.jpg
1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் நடிகை சுஷ்மிதா சென். உலக அழகி பட்டத்துடன் உலகை வலம் வந்து கொண்டிருந்த அவர் 1996ம் ஆண்டு “தஸ்தக்” படம் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். அர்ஜூன் நடித்த “முதல்வன்” படத்தில் “சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விட தோணலையா” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். நாகார்ஜூனின் ரட்சகன் படத்திலும் நடித்துள்ளார். சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் குழந்தைகள் மீது பிரியம். இதையடுத்து ஏற்கனவே “ரீனி” என்ற பெண் குழந்தையை தத்து எடுத்தார். அக்குழந்தையை தன்னை போல் அழகிப் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய பயிற்சிகள் அளித்து வருகிறார். தற்போது அலிஷா என்ற இன்னொரு மூன்று வயது பெண் குழந்தையையும் தத்து எடுத்துள்ளார். அக்குழந்தையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்து வந்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார்.

Comments

Most Recent