முன்னணி நடிகையாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளம் நடிகை தமன்னா, தனது சினிமா வருமானத்தை ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொட்ட ஆரம்பித்துள்ளார். ...
முன்னணி நடிகையாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளம் நடிகை தமன்னா, தனது சினிமா வருமானத்தை ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொட்ட ஆரம்பித்துள்ளார்.
2006-ல் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான தமன்னாவை, ஆரம்பத்தில் யாரும் சீந்தவில்லை என்றாலும், கல்லூரி படம் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து தமிழின் நம்பர் 1 நாயகியாக்கிவிட்டது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் தமன்னாவின் கைவசம் தமிழில் மட்டும் 10 படங்கள் உள்ளன. இன்னும் பல தயாரிப்பாளர்கள் அட்வான்ஸுடன் காத்திருக்கிறார்கள். தெலுங்கிலும் நடிக்கிறார்.
இந்தப் பணம் முழுவதையும் இப்போது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறாராம் தமன்னா. சென்னை தி நகர் பகுதியில் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பையே விலைபேசி வருகிறாராம். இதில் மொத்தம் 12 வீடுகள் உள்ளனவாம்.
சாலிகிராமம் பகுதியில் முன்பு ஸ்டுடியோ இருந்த இடத்தில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்றையும் தமன்னாவுக்காக சிலர் விலை பேசி வருகிறார்களாம். தமன்னாவின் 'நிஜ பின்னணி' அறிந்து, அவரிடம் எந்த வம்பும் செய்யாமல் பேரம் முடித்துக் கொடுக்கிறார்களாம் புரோக்கர்களும்.
இதே போல ஹைதராபாத்தில் ஒரு வீடும், மும்பையில் ஒரு வீடும் வாங்க முயற்சித்து வருவதாகக் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment