தெலுங்கு ஹீரோவும் கன்னட ஹீரோயினும் இணைந்து ‘அறியான்’ தமிழ் படத்தில் நடித்துள்ளனர். இது பற்றி அதன் இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது: வி...

தெலுங்கு ஹீரோவும் கன்னட ஹீரோயினும் இணைந்து ‘அறியான்’ தமிழ் படத்தில் நடித்துள்ளனர். இது பற்றி அதன் இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது: விளம்பர பட இயக்குனராக விரும்புகிறார் ஹீரோ. அவர் வாழ்க்கையை மூன்று பெண்கள் எப்படி திசை திருப்பி விடுகிறார்கள் என்பது கதை. பெண்களால் பாதிக்கப்படும் ஆணின் கதையிது.
இதை தமிழில் சில ஹீரோ, ஹீரோயின்களிடம் சொன்னபோது நடிக்க தயங்கினார்கள். அதனால் தெலுங்கு ஹீரோ ஆதித்யாவையும், கன்னட ஹீரோயின் ராகிணி திரிவேதியையும் நடிக்க வைத்துள்ளோம். மற்ற ஹீரோயின்களாக ருக்ஷா, ஸ்ரீஜி நடிக்கிறார்கள். இம்மாதம் படம் வெளிவருகிறது.
Comments
Post a Comment