Tuscana.. film star's favourite Italian restaurant

http://thatstamil.oneindia.in/img/2010/04/02-pizza200.jpg
டஸ்கானா... பெயரே ரொம்ப வித்தியாசமாக இருக்கில்லையா... ஏதோ சினிமா படத்தின் பெயர் என்று நினைத்துவிடாதீர்கள்... இது ஒரு உணவகம். ஆனால் சினிமாக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு உணவகம்.

சென்னை காதர் நவாஸ் கான் சாலையில் உள்ளது இந்த டஸ்கானா. துவங்கிய ஜஸ்ட் ஆறே மாதங்களில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குமளவு படு வேகமான வளர்ச்சி.

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் தரும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான 'டைம்ஸ் ஃபுட் அவார்டு 2010' இந்த உணவகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலிய வகை உணவுகள்தான் டஸ்கானாவின் ஸ்பெஷல். பொதுவாக இத்தாலிய வகை உணவுகளின் பெயர் மட்டுமல்ல... உணவும் கூட வாயில் நுழையாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்! ஆனால் டஸ்கானா இதில் விதிவிலக்கு. வித விதமான பீஸாக்கள், டெஸர்ட்டுகள், மேக்ரோனி வகைகள், கூல் ட்ரிங்குகள்... எல்லா அயிட்டங்களுமே இன்னும் ஒரு ரவுண்ட் கட்டலாமா என கேட்க வைக்கும் சுவையில் அசத்துகின்றன. பொதுவாக பீஸா டிஷ்களுக்கு கனமான பேஸை உபயோகப்படுத்துவார்கள். ஆனால் டஸ்கானாவில் மெல்லிசான பேஸ், அதுவும் கோதுமையாலான பேஸ் பயன்படுத்தப்படுவது ஸ்பெஷல்.

விபின் சச்தேவின் கனிவான அணுகுமுறை, தலைமை செஃப் வில்லியின் வியக்க வைக்கும் டிஷ்கள்தான் இந்த உணவகத்தின் சிறப்பு.

"இல்லாவிட்டால் இந்தத் துறையில் முன்னேற முடியாது. விதவிதமான டிஷ்கள், நல்ல சுவையுடன் இருப்பது முக்கியம். அதே போல வருகிற விருந்தினர்களை பார்த்துப் பார்த்து உபசரிக்கும் பக்குவம் இரண்டையும் இம்மியளவுக்குக் கூட குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... இதுதான் என் நோக்கம்" என்கிறார் விபின் சச்தேவ்.

இந்த உணவகத்தின் விஐபி கஸ்டமர்கள் வரிசை மிக நீளமானது. செல்வராகவன் மற்றும் ஆன்ட்ரியாவுக்கு மிகப் பிடித்த உணவகம் இதுதானாம் (ரெண்டு பேரும் தனித்தனியாதான் வருவாங்களாம்... நம்புகிறோம்!)

கவுதம் மேனன் துவங்கி கனிமொழி எம்பி வரை பெரும்பாலான சினிமா, அரசியல் விவிஐபிக்களின் முதல் விருப்பமாக இருக்கிறது டஸ்கானா.

கார்த்தி சிதம்பரம், போலீஸ் அதிகாரி லத்திகா சரண், கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனும் ஆகியோரும் டஸ்கானா கஸ்டமர்கள்தான்!

இந்த உணவகத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து, பக்கத்து சாலையிலேயே இன்னொரு டஸ்கானாவைத் திறக்கிறார் விபின். அடையாறிலும் ஒரு டஸ்கானா அமையவிருக்கிறது.

வர்த்தகம் மட்டுமல்ல... சமூக அக்கறையும் தனக்கு உண்டு என்பதைக் காட்டும் வகையில் தனது ரெஸ்டாரண்ட் உணவை ஏலம் விட்டு, அதில் வந்த பணத்தை சமூக நல அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார் விபின். அந்த ஏலத்தில் ஒரு டிஷ்ஷை ரூ 24000க்கு ஏலம் எடுத்துள்ளார் ஒரு விவிஐபி!

Comments

Most Recent