2 Ajmals in Karuppampatti Movie

http://img1.dinamalar.com/cini//CNewsImages/2090karuppampatti.jpg

அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அஜ்மலைத் தேடி சிலபல வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து திருதிரு துறுதுறு, தநா 07 அல 4777, கதிர்வேல் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆன அஜ்மல் இப்போது கருப்பம்பட்டி என்ற பெயரில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தில் அஜ்மலுக்கு இரட்டை வேடம். டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் கருப்பம் பட்டி படத்தை இயக்கவிருப்பவர் பிரபுசோழன். இப்படத்தில் ஒரு கிராமப் பின்னணியிலும், 70களில் நடந்த கதைக்களத்தையும் காட்டப்போகிறாராம் பிரபுசோழன். படத்தின் நாயகியாக நடிக்க சோனம் கபூரிடம் ‌பேசி வருவதாகவும் தகவல்.

Comments

Most Recent