உலகம் முழுவதும் 2,300 தியேட்டர்களில் கைட்ஸ் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipGcAgZhUSi5zPVx5NL-NKQq9NEb7Qw6zIsbQoLk0u2bs3PCigKA4SoK-g0dm2NsUIEHf_Zj6M8_S8e1SUi7UrwvPE8-f4G8xUGDOb28oyjm8nileNY5MLXdun9UGtcJJ5QVD9fPTzywg/s400/kites4.jpg
ஹ்ரித்திக் ரோஷன், பார்பரா மோரி நடித்துள்ள ‘கைட்ஸ்’ மே 21ம் தேதியன்று உலகம் முழுவதும் 2,300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரிலையன்சின் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளி யிடுகிறது. அந்நிறுவனத்தின் அதிகாரி சஞ்சீவ் லம்பா நேற்று கூறியதாவது; இந்தியாவில் 1,800 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 500 தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் ‘கைட்ஸ்’ வெளி யாகிறது. முதல் கட்டமாக மே 21ம் தேதியன்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென்னாப் பிரிக்கா மற்றும் 30 நாடுகளில் படம் வெளியாகும். இரண்டவது கட்டமாக மேலும் 30 நாடுகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

ஹ்ரித்திக் ரோஷன், பார் பரா மோரி, தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், இயக்குனர் அனுராக் பாசு, இசைய மைப்பாளர் ராஜேஷ் ரோ ஷன், ஆகியோர் படத்தின் புரமோஷனுக்காக நியூ யார்க், லண்டன் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொன்டுள்ளனர். இது தவிர பார்பரா மற்றும் பிரெட் ராட்னர் ஆகியோ லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி ஆகிய நகரங்களுக்கும் செல் கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Most Recent