பாரதிராஜாவின் முதல் சம்பளம் ரூ. 75


சினிமாவில் ஆர்வம் இருந்தாலும் இயக்குநர் பாரதிராஜா பார்த்த முதல் வேலை சுகாதார ஆய்வாளர்.​ இந்த வேலையின் மூலம் கிடைத்த மாதச் சம்பளம் ரூ.75.

சென்னை வந்து பெட்ரோல் பங்க் வேலை,​​ டிராமா குரூப் அப்புறம்தான் சினிமா.​ தமிழில் 31,​ தெலுங்கில் 4,​ ஹிந்தியில் 4 என நீள்கிறது பாரதிராஜா இயக்கிய படங்களின் எண்ணிக்கை.​ வெள்ளை உடை தரித்த பெண்,​​ மலை அருவி,​​ செம்மண் சாலை,​​ ஒற்றை பள்ளி,​​ அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக பாரதிராஜாவின் படங்களில் இடம் பெறும்.​ 1986-ல் தாஷ்கண்ட் பட விழாவில் 'முதல் மரியாதை' திரைப்படத்தை திரையிட்டார்கள்.​ சப் டைட்டில் போடப்பட்டும் படத்தை புரிந்துக் கொள்ள சிரமப்பட்டார்கள்.​ விழாவுக்கு போயிருந்த ராஜ்கபூர் சீனுக்கு சீன் ரன்னிங் காமென்ட்ரி கொடுக்க பாராட்டினர் மக்கள்,​​ கண்ணீரில் நனைந்திருக்கிறது இயக்குநரின் விழியோரங்கள்.

தன்னை பாதித்த இயக்குநர்கள் என ஸ்ரீதரையும்,​​ பாலசந்தரையும் குறிப்பிடுவார் பாரதிராஜா.​ பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம்,​​ ஷங்கர்,​​ சேரன்,​​ பாலா,​​ அமீர்,​​ பாலாஜி சக்திவேல்,​​ வசந்தபாலன்.​ 'தென்கிழக்கு சீமையிலே',​ 'குற்றப் பரம்பரை' என்ற இரு படங்களை இயக்க உள்ளார்.​ உலக சினிமாக்களின் வரிசையில் வைக்கக் கூடிய படமாக அது இருக்குமாம்.

Comments

Most Recent