ரஜினி 30 கோடி, கமல் 25 கோடி சம்பளம்... தெருக்கோடியில் தவிக்கும் தயாரிப்பாளர்கள்! பிரபல தமிழ் வார இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு படத...
ரஜினி 30 கோடி, கமல் 25 கோடி சம்பளம்... தெருக்கோடியில் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!
பிரபல தமிழ் வார இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு படத்தில் நடிக்க
ரஜினி 30 கோடி
கமல் 25 கோடி
விஜய் 10 கோடி
அஜீத் 7 கோடி
விக்ரம் 7 கோடி
சூர்யா 6 கோடி
சிம்பு 5கோடி
தனுஷ் 4 கோடி
விஷால் 2 கோடி
ஜெயம் ரவி 2 கோடி
ஆர்யா 1 கோடி
வடிவேலு நாளொன்று 6 லட்ச ரூபாய் வரை
நடிகைகள்
அசின் 2கோடி
நயன்தாரா 1 கோடி
தமன்னா 1 கோடி
அனுஷ்கா 75 லட்சம்
த்ரிஷா 70 லட்சம்
ஸ்ரேயா 40 லட்சம்
இசையமைப்பாளர்
ஏ.ஆர். ரஹ்மான் 3 கோடி
ஹாரீஸ் ஜெயராஜ் 1.60 கோடி
யுவன்சங்கர் ராஜா 1 கோடி வாங்குவதாகத் தெரிகிறது.
தமிழ் இயக்குநர்களைப் பொருத்தவரை பாலாவும் செல்வராகவனும் ஒரு படத்தை முடித்துக்கொடுக்க இத்தனை கோடி என்ற கணக்கில் பெறுகிறார்களாம். மற்றவர்களில் ஷங்கர் 8 கோடியும் ஏ.ஆர். முருகதாஸ் 7 கோடியும் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
இதில் கறுப்பு வெள்ளைப் பண விவகாரமும் விளையாடுகிறது என்கிறது கட்டுரை.
இப்படி கோடிக் கோடியாக நடிகர் நடிகைகளுக்கு கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்களோ தெருக்கோடியில் தவிப்பதாகவும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள் லாபம் சம்பாதித்து தருவதை விட சின்ன பட்ஜெட் படங்கள் லாபகரமாக அமைகிறதாம்.
உதாரணத்திற்கு விக்ரமின் 'கந்தசாமி' பலகோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அது வெற்றிப்படம்தான் என்றாலும் அப்படத்தால் தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் இல்லை. தயாரிப்பாளர் பற்றி கவலைப்படாத விக்ரம் அடுத்தப் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்.
விக்ரம் போலவே கமல், அஜீத், விஜய் போன்றவர்களும் தங்கள் படத் தோல்வி குறித்து
சிறிதும் கவலைப்படுவதில்லை. அடுத்தப் படத்திற்கு தாவி விடுகிறார்கள்.
ரஜினி இவர்களிடமிருந்து மாறுபடுவதாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயக்குநர் பாலசந்தர் எடுத்த 'ராகவேந்திரா' திரைப்படம் நஷ்டம் அடைந்ததால் ரஜினி
பாலசந்தருக்காக 'வேலைக்காரன்' திரைப்படத்தில் நடித்துக்கொடுத்து ஈடுகட்டினார் என்கிறார்கள். 'பாபா' ஓடாத போது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கணிசமான தொகையை ரஜினி திருப்பிக் கொடுத்தார் ரஜினி என்றும் புகழ்பாடுகிறார்கள்.
'பில்லா' அஜீத் தை நம்பி சிவாஜி பிலிம்ஸ் எடுத்த 'அசல்' தோல்வி. செல்வராகவனை நம்பி 30 கோடியில் எடுக்கப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் தோல்வி என்று கட்டுரையில் புலம்பியிருக்கும் தயாரிப்பாளர்கள், நொடிந்து போன தயாரிப்பாளர்களுக்கு உதாரணமாக பெரிய பட்ஜெட் பட தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னத்தின் இன்றைய அவல
நிலையை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக தமிழ்ப்பட இயக்குநர்களை குற்றம் சாட்டியிருக்கிறார் ஒரு காலத்தில் வெள்ளிவிழா இயக்குநர் என அழைக்கப்பட்டவர்.
'இன்றைய படங்களைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது' என்று சொல்லும் இவர், 'இப்போ படத்தை இயக்குகிறவர்கள் எதுக்காக படம் எடுக்கிறார்கள்,? படத்தில் என்ன
சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. சினிமா என்பது காஸ்ட்லியான தொழில்தான். ஆனால் கதையைச் சொல்லும்போது அது நம்மை உள்ளே பிடிச்சு இழுக்கணும். திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தப் பிறகும் மனதைப் பிடித்து ஆட்டணும்' என்று சொல்லியிருக்கிறார்.
ஒரே ஆள் ஒரு அடி கூட படாமல் நூறு பேரை நொறுக்குவதை எப்படி
ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும் இவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கெல்லாம் இன்றைய இயக்குநர்கள்தான் காரணம் என்றும் சொல்லும் அவரே 'காதல்' ன்னு ஒரு படம் வெற்றி பெற்றால் அதேபோல் பத்து படங்களை வரிசைக்கட்டி அடிக்கிறார்கள். 'சுப்ரமணியம்' படம் போலவே நாலு படமாவது வருகிறது என்று குட்டு வைத்திருக்கிறார்.
நல்ல படம், வெற்றிப்படம் வேண்டுமென்றால் நடிகர் மட்டுமல்லாமல், இன்றைய
இயக்குநர்களும் ஹோம் ஒர்க் பண்ணனும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் மெசேஜ் வந்தால் கூட ரசிகன் அதை தவிர்க்கும் அளவுக்கு கதையால், காட்சியமைப்பால் ரசிகர்களை கட்டிப்போட வேண்டும் என்பதும் அவருடைய அறிவுரை.
என்று அந்தக் கட்டுரை முடிக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment