நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படமான வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கப் போகிறாராம். தற்போது தனுஷ் ஜோடியா...
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படமான வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கப் போகிறாராம். தற்போது தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அதனைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக நடிக்கிறார். பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்த நாயகி ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வந்த தேவதையான ஹன்சிகா, தமிழிலும் ஜெயிப்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இச் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அவர் புக் ஆகியிருக்கும் எந்த படமும் இன்னமும் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மட்டும் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதத்தில் ஜெனிலியாவுக்கு பதிலாக ஹன்சிகா
சித்திக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் ஜோடி அசின். இந்தப் படத்தை அடுத்து, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் நடிக்கிறார். இதை ஜெயம் ராஜா இயக்குகிறார். இதில், விஜய் ஜோடியாக ஜெனிலியா, காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது காஜலுக்குப் பதிலாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். விஜய் தங்கையாக சரண்யா மோகன். இவர்கள் பங்கேற்ற போட்டோஷூட் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. வரும் 27&ம் தேதி படத்தின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.
Comments
Post a Comment