Entertainment
›
Cine News
›
Ajith's narrow escape from huge airborne accident | கார் ரேஸில் உயிர் தப்பினார் அஜீத்
Ajith's narrow escape from huge airborne accident Ajith's narrow escape from huge airborne accident வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில...
Ajith's narrow escape from huge airborne accident Ajith's narrow escape from huge airborne accident
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத்.
இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.
இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.
நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.
Comments
Post a Comment