Asin interview about Dhoni | தோணியுடன் காதலா? அசின் பரபரப்பு பேட்டி!

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/09/dhoni-with-asin.jpgகோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய்விட்டு மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச வந்திருக்கிறார் அசின். மும்பையில் இருந்தவரை அப்பாவுடன் சண்டை, தனி வீட்டில் குடித்தனம், பார்ட்டி கசமுசா என்று வதந்திகள் பல பரவி வந்தன. இப்போது புதிதாக அசினைச் சுற்றி வரும் கிசுகிசு தோணியுடன் காதல் என்பதுதான். சமீபத்தில் கேப்டன் தோணி, அசினின் வீட்டுக்கு சென்றதுதான் இந்த கிசுகிசுவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டால், தோணி பற்றிய கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாகப் பார்க்கிறார்கள். நானும் தோணியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு. அதை களங்கப்படுத்தாதீர்கள், என்றார். பாலிவுட் ஹீரோக்களுக்கு பார்ட்டி வைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் மது அருந்த மாட்டேன். புகை பிடிக்க மாட்டேன். எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை. இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் கலந்து கொள்வேன், என்றார் அசின்.

பாலிவுட் பக்கம் போனபோது தமிழ் படங்களை நிராகரித்து விட்டு, இப்போது அங்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் சினிமா பக்கம் திரும்பி வந்திருக்கும் அசினிடம் அதுபற்றி கேட்டால் ரொம்பவே டென்ஷன் ஆகிறார். நான் முதலில் தமிழை விட்டு போவதாக கூறவே இல்லை. எனவே திரும்பி வந்துள்ளேன் என்று கூற முடியாது. நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தேன். எந்த ஒரு தனிப்பட்ட மொழி படங்களுக்கும் நான் சொந்தக்காரி அல்ல. எல்லா மொழிப் படங்களிலும் நான் நடிப்பேன். தமிழில் கஜினி மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு எனக்கு நிறையப் படங்கள் வந்தன. ஆனால் நல்ல படங்களாக பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடித்தேன். போக்கிரி, தசாவதாரம் படங்களுக்கு முன்பு என்னைத் தேடி வந்த பல படங்களை நான் நிராகரித்துள்ளேன் – கதை பிடிக்காததால், என்று கூறியிருக்கிறார் அசின்.

Comments

Most Recent