விஜய.டி.ராஜேந்தர் வீட்டின் ரகசிய திருமணம்

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/vtr.jpg

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான மனிதர்.  தனியொரு மனிதராக தமிழ்சினிமாவில் ஜெயித்தவர். அரசியலில் புயலைக் கிளப்பியவர் என்ற அரைவேக்கட்டு புகழுக்கு சொந்தக்காரராக இருப்பவர் டி.ராஜேந்தர்.


ஆபாசம், அருவெறுப்பு, டப்பாங்குத்து என தமிழ்சினிமாவை குப்பைத்தொட்டியைப் போல முடைநாற்றம் எடுக்கச் செய்ததில், பிரபல   பட  நிறுவனங்களுக்கு  எத்தனை பெரிய பங்கு இருகிறதோ அதே அளவு   பங்கு டி.ராஜேந்தருக்கும் உண்டு.

ஒரு கட்டத்தில் தனது உப்புமா படங்களை தமிழ் ரசிகர்கள் புறக்கனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றவுடன்,  இது ஏதோ கோடாம்பாக்கத்தில் தனக்கு எதிராக நடக்கும் சதி என்று முடிவுக்கட்டி தனது உலக மகா ஜோதிட அறிவை பயன்படுத்தி,  பெயரை விஜய.டி.ராஜேந்தர் என மாற்றி அமைத்துக்கொண்டார். இத்தனை அளப்பரிய தன்னம்பிக்கைக்கொண்ட விடிஆர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில், சிம்புவுக்கு எப்போது திருமணம் என்ற நிருபரின் கேள்விக்கு “ அவன் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் முடிந்த பிறகே தனக்கு திருமணம் என்று உறுதியாகக் கூறிவிட்டான். அவன் கடமை உணர்வு மிக்க அண்ணன். செண்டிமெண்டுகள் நிறந்தவன். அவனை ஜெயிக்க ஒருவன் பிறக்கவில்லை....! அவனை சூப்பர் ஸ்டார் ஆக்காமல் எனக்கு உறக்கமில்லை...! :” என்று ரஜினியே நடுங்கிவிடுகிற மாதிரி பேட்டி கொடுத்திருந்தார். 

பல மிமிக்கிரி க்கலைஞர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மாதிரியாக மாட்டிக்கொள்ளுவதிலும் விடிஆர் முன்னணியில்தான்.  ஆனாலும் நடிகைகளைத் தொட்டு நடிக்காதவர் என்றவொரு நல்ல அபிப்பிராயமும் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் அவருக்கு உள்ளது. அதுபோலவே நல்ல தமிழுணர்வாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இவ்வளவு தூரம் பேசப்படுகின்ற விடிஆர் வீட்டில் இப்போ விஷேசம் நடந்திருப்பதாகக் கேள்வி.  தனது மகள் தமிழ் இலக்கியாவின் திருமணத்தை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிமையான குடும்ப விழாவாக கடந்த வாரம்  அவசரமாக நடத்தி முடித்து விட்டதாக நம்பிக்கையான வட்டாரத்திலிருந்து தகவல். இந்த திருமணம் காதல் திருமணம் என்றும், மணமகன் பிரபல சென்னை தொழில் அதிபரின் மகன் என்றும் கூடுதல் தகவல். எதையும் ஆர்ப்பாட்டமாகச் செய்யும் அவர், மகளின் திருமணத்தை ஏன் இத்தனை எளிமையாக நடத்தினார் எனத் தெரியவில்லை என்கிறது கோடம்பாக்கம் 

Comments

Most Recent