ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் படம், ‘வெளுத்து கட்டு’. படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரயிலில் ...
ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் படம், ‘வெளுத்து கட்டு’. படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரயிலில் டிக்கெட் எடுக்காமல், செங்கல்பட்டு வரை வந்த நான், அங்கிருந்து சென்னைக்கு நடந்தே வந்தேன். பல சோதனைகளையும் கடந்து வெற்றிபெற்றேன். 65 படங்கள் இயக்கியுள்ளேன். விஜயகாந்த், ரகுமான், விஜய், சிம்ரன், இசையமைப்பாளர் பரணி உட்பட பலரை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளேன். ‘வெளுத்து கட்டு’ படத்தில் ஹீரோ கதிர், இயக்குனர் சேனாபதிமகன், ஹீரோயின் அருந்ததி போன்றோரை அறிமுகம் செய்துள்ளேன்.
என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு தான், படத்தின் கதை. மதுரையில் இருந்து சென்னை வரும் இளைஞன் சந்திக்கும் வாழ்க்கை போராட்டங்கள், அவன் சந்திக்கும் கஷ்டங்கள், அதிலிருந்து அவன் எப்படி போராடி மீள்கிறான் என்பது படம். இன்றைய இளைஞர்களிடம் போராட்ட குணம் குறைந்து விட்டது. அல்லது அந்த குணம் இருந்தும், அதை அடையாளம் காண முடியாமல் உள்ளனர். அதை வெளிக்கொண்டு வரும் படமாக இது அமையும். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.
Comments
Post a Comment