லிங்குசாமி படத்தில் சிம்பு,மகேஷ் பாபு

Shimbu
‘பையா’ படத்துக்கு பின் லிங்குசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். குளோட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இது பற்றி லிங்குசாமி கூறும்போது, ‘ஜூலையில் இப்பட ஷூட்டிங் தொடங்குகிறது. பட தலைப்பு, ஹீரோயின் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகவில்லை. இதன் ஷூட்டிங் முடிந்ததும் இதே படத்தை தெலுங்கில் இயக்குகிறேன். சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி தயாரிக்கிறார். மகேஷ்பாபு நடிக்கிறார்’ என்றார். இப்படங்களை முடித்த பின் மம்மூட்டியின் மகன் சல்மான் அறிமுகமாகும் தமிழ் படத்தை இயக்க உள்ளார் லிங்குசாமி.

Comments

Most Recent