‘மாஞ்சா வேலு’ படத்தில் நடித்துள்ள அருண் விஜய், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 21&ம் தேதி படம் ரிலீஸ். அதிரடி ஆக்ஷன் கதை. மொட்டை போட்டு...
‘மாஞ்சா வேலு’ படத்தில் நடித்துள்ள அருண் விஜய், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 21&ம் தேதி படம் ரிலீஸ். அதிரடி ஆக்ஷன் கதை. மொட்டை போட்டு நடித்துள்ளேன். அண்ணனாக கார்த்திக், அப்பாவாக விஜயகுமார், ஜோடியாக தன்ஷிகா நடிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமிப்பாக இருக்கும். எனது மாமனார் டாக்டர் மோகன் தயாரிப்பில், ‘மலை மலை’யில் நடித்தேன். இப்போது ‘மாஞ்சா வேலு’. அடுத்து ‘காவல்துறை’யில் நடிக்கிறேன். லண்டனில் உள்ள யுனைடெட் ஸ்டேட் பாராசூட் அசோஸியேஷனில், சில மாதங்கள் ஸ்கை டைவிங் பயிற்சி பெற்றேன். 13 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். சில ஆயிரம் அடிகள் வரை, வானில் பறவை போல் வட்டமிடலாம். 9 ஆயிரம் அடி வரை, பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற வேண்டும். 4 ஆயிரம் அடி உயரம் இருக்கும்போது, பாராசூட்டை விரித்து, பத்திரமாக தரையிறங்க வேண்டும். இப்படி பல்வேறு நிலைகளில் வைத்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளேன். உலகின் எந்த பகுதிக்கும் சென்று, நான் பெற்ற லைசென்சை வைத்து ஸ்கை டைவிங் செய்யலாம். இந்திய நடிகர்களிலேயே இந்த பயிற்சி பெற்ற நடிகன் நான் மட்டும்தான். இவ்வாறு அருண் விஜய் கூறினார்.

Comments
Post a Comment