தோல்வியில் இருந்து பாடம் கற்கிறேன் : இலியானா!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1061.jpg

தோல்வியில் இருந்து பாடங்கள் கற்கிறேன் என்றார் இலியானா. ‘கேடி’ படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அவர், விக்ரம் ஜோடியாக, பூபதி பாண்டியன் இயக்கும் ‘வெடி’ படத்தில் நடிக்க உள்ளார். அவர் கூறியதாவது: நான் நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்தால் என்னை நானே தண்டித்துக்கொள்வேன். ஆனால், அது தேவையில்லாதது என்பதை புரிந்துகொண்டேன். ஒரு படத்தின் தலைவிதி நம் கையில் கிடையாது. ஏற்ற வேடத்தில் கவனமாக நடிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இப்போதெல்லாம் தோல்வியிலிருந்து பாடங்கள் கற்கிறேன்.

தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் நடிக்கவிருந்த ‘ஷக்தி’ படத்தின் ஷூட்டிங் தள்ளிபோயிருக்கிறது. கன்னடத்தில் நடிப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ‘கடந்த ஆண்டு தெலுங்கில் அறிமுகமான நடிகைகளால் உங்களுக்கு பாதிப்பா?’ என்கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்கிறேன். எந்த புதுமுக வரவாலும் மிரண்டுவிடவில்லை. என்றைக்கும் ரசிகர்களின் மனதை கவர்பவளாக இருக்க முடியுமா என்பது தெரியாது. எனக்கு எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் திட்டமிட்டபடியும் எதுவும் நடந்ததில்லை. இவ்வாறு இலியானா கூறினார்.

Comments

Most Recent