Last Updated : ...
எம்.ஜி.ஆரின் 'மலைக் கள்ளன்' படம்தான் வி.சி.குகநாதனின் சிறு வயது மனதில் சினிமா கல்லை தூக்கி போட்டிருக்கிறது. பின் மெட்ராஸ் நாட்டிய சங்கம் பள்ளியில் சேர்ந்து சினிமா பயின்றிருக்கிறார். சோ, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா ஆகியோர் வி.சி.குகநாதனின் சக மாணவர்கள்.
'அணையா விளக்கு', 'டே ட்ரீம்', 'எது அன்பு' உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடகங்களை அப்போதே நடத்தியிருக்கிறார். வி.சி.குகநாதன் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
''பின்னாளில் என்னவாகப் போகிறாய்'' என எம்.ஜி.ஆர். கேட்க ''சினிமாவுக்கு கதை எழுத வேண்டும்'' என வி.சி.சொல்ல, எனக்கொரு கதை எழுது என்று சொல்லி விட்டுச் சென்றாராம் எம்.ஜி.ஆர். பின் எம்.ஜி.ஆருக்காக வி.சி.குகநாதன் எழுதிய கதைதான் 'புதிய பூமி'. பின் 'குமரிக் கோட்டம்' என விரிந்திருக்கிறது அவரது சினிமா கனவு. 272 படங்களுக்கு எழுத்தாளர், 57 படங்களுக்கு இயக்குநர், 51 படங்களுக்கு தயாரிப்பாளர் என நீள்கிறது வி.சி.யின் சாதனைப் பட்டியல். வி.சி.குகநாதன் தயாரித்த 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை பார்த்த காமராஜர் ''இது மாதிரி நல்ல சினிமாவா எடு தம்பி'' என வி.சி.யின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார். தற்போது தமிழக பெப்ஸி அமைப்புக்கு வி.சி.குகநாதன் பத்தாவது தலைவர்.

Comments
Post a Comment