மீண்டும் சரித்திர படம் இயக்குகிறார் செல்வராகவன்

Selvaragavan
5ம் நூற்றாண்டில் நடந்தது போன்ற சரித்திர படத்தை இயக்குகிறார் செல்வராகவன். சோழர்கால வரலாறு பின்னணியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இயக்கினார் செல்வராகவன். அடுத்து, 5ம் நூற்றாண்டில் நடந்தது போன்ற சரித்திர கதையை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்களை தயாரித்த ராம நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் தெலுங்கு ஹீரோ ராணா நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இப்படத்தின் கதை விவாதம், பட்ஜெட் பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காடுகளில் நடக்க உள்ளது. என் உயரத்துக்கு ஏற்ற நாயகி இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் கிடைப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

Comments

Most Recent