பச்சை என்கிற காத்துக்காக ஒரே ஷாட்டில் ஒரு பாடல்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1128.jpg
அ திரை நிறுவனம் சார்பில் அஸ்வத்தாமன் இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி தயாரிக்கும் படம், ‘பச்சை என்கிற காத்து’. புதுமுகம் வாசகர், தேவதை ஜோடியாக நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தங்கர் பச்சான் உதவியாளர் கீரா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

மணப்பாறை அருகே வாழ்ந்த ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளேன். தான் தேர்ந்தெடுத்த அரசியலாலும் காதலியாலும் வாழ்வை சீரழித்த இளைஞனின் கதைதான் இது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் தங்கள் நினைவுகளில் இருந்து கதை சொல்வது போல் காட்சிகள் இருக்கும். எந்த மிகைப்படுத்தலும் இன்றி யதார்த்தமாக படமாக்கியுள்ளேன். இந்த படத்துக்காக, ‘சிரிக்கிறாளே... சிரிக்கிறாளே... என்னை கிறுக்கனாக்க சிரிக்கிறாளே’ என்ற பாடல் காட்சியை, புதுமையாக இருக்கட்டும் என்று ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம். கேமரா ஒரே இடத்தில் நிற்காமல், எல்லா கோணங்களிலும் இருக்கும். படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு கீரா கூறினார்.

Comments

Most Recent