Entertainment
›
Cine News
›
CM to felicitate S Ve Shekher | முதல்வர் தலைமையில் எஸ்.வி.சேகருக்கு பாராட்டு விழா
நாடக உலகில் எஸ்வி சேகரின் சாதனை சாதாரண விஷயமல்ல. இதுவரை 5600 முறை மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ள ஒரே நாடகக் கலைஞர், தமிழில் எஸ் வி சேகர்த...
நாடக உலகில் எஸ்வி சேகரின் சாதனை சாதாரண விஷயமல்ல. இதுவரை 5600 முறை மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ள ஒரே நாடகக் கலைஞர், தமிழில் எஸ் வி சேகர்தான்.
குறும்பு, நையாண்டி என நகைச்சுவைத் தோரணம்தான் எஸ்வி சேகரின் நாடகங்கள் என்றாலும், பார்ப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்டவை.
அவரது இந்த சாதனையை இன்று (வெள்ளிக்கிழமை) பாராட்டிப் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி.
சென்னை நாரத கான சபாவில் நடக்கும் நாடகப்ரியாவின் நாடகவிழாவில் பங்கேற்கும் முதல்வருக்காக, தனது 'அல்வா' நாடகத்தை அரங்கேற்றுகிறார் எஸ்வி சேகர்.
துணை முதல்வர் முக ஸ்டாலின், இயக்குநர் ராம நாராயணன் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
எஸ்வி சேகரின் நாடக நிறுவனமான நாடகப்ரியா கலைஞர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்குகிறார்.
ஈவெரா மோகன் வரவேற்றுப் பேசுகிறார்.
Comments
Post a Comment