Comedy Actor Senthil hospitalized

http://mimg.sulekha.com/senthil/stills/senthil-18.jpg
கமெடி நடிகர் செந்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுத்தண்டு எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு ஆபத்தான ஆபரேஷன் செய்யப்பட்டது. நடிகர் செந்தில், கொடைக்கானலில் நடந்த ஒரு படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க சென்றபோது, கால் இடறி ஒரு பாறை மீது விழுந்தார். அதில், அவருடைய முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் சூட்டிங்கில் பங்கேற்றார். இதையடுத்து சமீபத்தில் அவர் தனது காரில் சேலம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ஒரு பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் செந்திலுக்கு மீண்டும் முதுகில் அடிபட்டது. இதில் நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார்.

இதையடுத்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு செந்திலை பரிசோதித்த டாக்டர்கள், முதுகுத்தண்டு எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான ஆபரேஷன் என்பதால் 10 டாக்டர்கள் சுமார் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்தனர். ஆபரேஷனுக்கு பின்னர் நடிகர் செந்தில் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

Comments

Most Recent